சினிமா செய்திகள்
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
Ads
 ·   ·  1438 news
  •  ·  0 friends
  • 1 followers

பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு - ரங்கேஸ்வரன் கேள்வி!

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் அதைவிடுத்து மக்களை பகடைகளாக பயன்படுத்தி பணப்பட்டி அரசியல் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடாக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

தமிழ் கட்சிகள் சில எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களம் இறக்கப் போகிறோம் என ஆங்காங்கே கூடிப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதாக வாக்குறுதி கொடுத்து அபிவிருத்திக்கென பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளனர்.

மறுபுறம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை பொது வேட்பாளராக களம் இறங்க கேட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பின்னர் தான் அவ்வாறு கேட்கவில்லை என சுரேஷ் பதில் அறிக்கை வழங்கியதையும் ஊடகங்களில் பார்த்தேன்.

ஆனால் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் பிரேமச் சந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். குறிப்பாக பிரதேச சபை தேர்தலில் கூட அவரது அணியினரை மக்கள் முழுமையாக புறக்கணித்து ஓரங்கட்டி விட்டனர்.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆணை கிடைத்தது வரும் நிலையில் மக்கள் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு எமக்கு மக்கள் ஆணையுள்ளது.

இந்நிலையில் இப்போது பொது வேட்பாளர் என்ற விடயத்தை கையிலெடுத்துள்ள தரப்பினர்  மக்களை குழப்பி பணப்பட்டி அரசியலை மேற்கொள்ள வா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெறுவது அவசியம். அதைவிடுத்து மக்களை பகடைகளாக பயன்படுத்தி தொடர்ந்தும் பணப்பட்டி அரசியல் செய்யக்கூடாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 422
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads