Ads
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவை தற்போதைக்கு கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள 2000 கிராம அலுவலர்களை அஸ்வெசும கொடுப்பனவு செயற்பாட்டில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களை பரிசீலிப்பது, கணனி வலையமைப்பில் தரவேற்றுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads