Ads
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – குசல் மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு விசா கிடைப்பதில் சிக்கல்
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டார். அத்துடன், உபதலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, மகீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, மதீஷ பத்திரன மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் குறித்த குழாமில் பெயரிடப்பட்டனர்.
இந்நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா இன்னமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசா கிடைத்ததும் அவர்கள் அமெரிக்கா செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads