விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு வேண்டுகோள்
கிளிநொச்சி இரணைமடு பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரைச்சி பிரதேச உதவி அமைப்பாளர் தோழர் சுபாஷ் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
கடந்த 2014 இல் அமைய ஊழியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் நிரந்தர நியமனத்தை பெற முடியாது இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
தமக்கு நாளாந்த வேதனமாக அண்மைக்காலத்தில் இருந்து 1300 ரூபா வழங்கப்படுவதாகவும் தற்போதைய வாழ்க்கை செலவினத்தில் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் தாம் வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் கிளி நகருக்கு வெளியே பல மைல்கள் தூரத்தில் இருந்து பல நெருக்கடிகளின் மத்தியில் தாம் வேலைக்கு சென்று வருவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளி ஒருவர் தெரிவித்திரந்தார்..
தமது நெருக்கடி நிலையை கவனத்தில் எடுத்து அமைச்சர் அவர்களை சந்தித்து தமது நிலமைகளை நேரடியாக எடுத்து கூறி நிரந்தர நியமனம் பெற ஆவன செய்து உதவுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்திருந்மை குறிப்பிடத்தக்கது
000