ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடை - அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவும், ஈரானும் சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்த்தில் கையெழுத்திட்டுள்ள பின்னணியிலேயே அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தனது தினசரி செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஈரானும் இந்தியாவும் சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதர தடைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை "எந்தவொரு நிறுவனமும், ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களை செய்துகொள்ளும்போது, பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து குறித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில் நாங்கள் இதை வலியுறுத்தியிருக்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000