
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் - பரிகாரம் கிடைக்கும் என நம்புவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்தியர்களின் தவறு காரணமாக சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் நீதிமன்றத்திலும் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் இடம் பெற்று வரும் நிலையில் சிறுமிக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்புவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வைசாலி என்ற சிறுமியின் கை மனிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - குறித்த சிறுமி விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
அது மட்டும் அல்லாது சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டத்திலான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
ஆகவே குறித்த விசாரணைகளின் முடிவுகளின் பிரகாரம் சிறுமிக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000