Category:
Created:
Updated:
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 11.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000