
இந்தியன் ப்ரீமியர் லீக் - சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 61 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சார்பில் ரியான் பராக் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சிம்ராட் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் 142 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000