Ads
ஈரானின் எச்சரிக்கையால் போர் பதற்றம் அதிகரிப்பு
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், தாம் அணுகுண்டுகளை தயாரிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மத தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ தங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads