Category:
Created:
Updated:
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி சார்பில், அதிகபடியாக சுப்மன் கில் 104 ஓட்டங்களையும், சாய் சுதர்ஷன் 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், 232 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.
000