Ads
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று (10) மாலை குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என சீன நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தாய்வானில் கடந்த மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 1,000 ற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads