
2024 இறுதிக்குள் 3 பில்லியன் டொலருக்கு அதிக முதலீடுகளை கொண்டுவர முடியும் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாட்டின் முதலீட்டுச் சூழல் தற்போது 200% மேம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றிய உறுதிப்பாடு ஆகியவை இருக்க வேண்டும் எனவும், தற்போது இந்நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவுவதை நாட்டிற்கு வரும் முதலீடுகள் உறுதிப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.
000