Ads
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றி
பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில், பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என்ற தீர்மானக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. 25 நாடுகள் புறக்கணித்துள்ளன.
அதேவேளை, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
00
Info
Ads
Latest News
Ads