சொத்துக்காக நடிகையை கொலை செய்து புதைப்பு
சொத்துக்காக நடிகையை கொலை செய்த புதைத்த வளர்ப்பு தந்தை குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை லைலா கான் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு திடீரென காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் லைலா கான் தாயார் பர்வேஸ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர்தான் லைலா காணாமல் போனதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்ததை அடுத்து அவர்தான் லைலா கான் உள்பட ஆறு பேரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இந்த தீர்ப்பில் லைலாகான் வளர்ப்பு தந்தை பர்வேஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கபப்ட்ட நிலையில் அவரது தண்டனை குறித்த விவரம் வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனேகமாக அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.