
முன்று தீவுகளின் மின் கட்டண குறைப்புக்கு அமைச்சரவை பத்திரம் – தீவகத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு ஆகிய மூன்று தீவகளிலும் வாழும் மக்களின் மின்சார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவுள்ளதுடன் அப்பகுதிகளில் காற்றலை மின் உற்பத்திக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றதும் மின் கட்டணத்தை குறைப்பதற்கும் அமைச்சரவை பத்திரம் கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர்ட குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
தீவக பிரதேச மக்களுக்கு தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதனடிப்படையில்தான் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்டு கொடுத்த ஏற்பாட்டின் பிரகாரம் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மற்றும்நயினாதீவு அனலைதீவு ஆகிய பிரதேச மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார சபையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மின்பிறப்பாக்கிகள் தொழில் நுட்ப கோளாறுகளுக்கு உட்படும் சமயங்களில் மின்தடைகள் ஏற்படும் நிலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. இவ்விடயம் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த தடங்கல் தொடர்பில் கலந்துரையாடலையும் மேற்கொண்டு உடனடி தீர்வகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளேன்..
இதேநேரம் இப்பகுதியில் காற்றலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள்.மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக இப்பகுதியில் உற்பத்தியாகும் மின் வலுவானது நாட்டின் பிரதான மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட வெண்டிய அவசியம் ஏற்படாது. இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இங்கு உற்பத்தியாகும் காற்றலை மின் வலுவானது குறைந்த விலைக்க நுகர்வோருக்கு வழங்க மடியுமான நிலை இரக்கின்றது.
அதனடிப்படையில்என்றும் இப்பகுதிகளில் மின் கட்டண குறைப்பிற்கு அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரமொன்றையும் விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000