அமேதி, ரேபேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
அமேதி மற்றும் ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் தற்போது ரேபேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா போட்டியிடுவதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அமேதி தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சார்பாக கிஷோர் லால் சர்மா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு அமேதி, ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் கடைசி நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் ஆச்சரியமாக அமைதி தொகுதிக்கு பதிலாக ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.