Category:
Created:
Updated:
தி கேரளா ஸ்டோரி என்ற படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 32,000 இளம்பெண்களை காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்ததாக கூறப்பட்டு இந்த படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரளாவில் படத்தை திரையிட ஆளும் அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து தடை விதித்தது. தற்போது தேர்தல் நெருங்கும் சூழலில், படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரபர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிடி நேஷனல் மூலம் சித்தாந்த முனைப்பைத் தூண்டும் 'கேரள கதை' திரைப்படத்தை ஒளிபரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய செய்தி ஒளிபரப்பாளர் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது. இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.