சினிமா செய்திகள்
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
பார்கின்சன் நோயால் அவஸ்தைப்பட்ட நடிகை காலமானார்
கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா. இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
Ads
 ·   ·  7537 news
  •  ·  5 friends
  • I

    9 followers

“நாடு இதுவரை வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டுமே பார்த்துள்ளது” - மீரட்டில் பிரதமர் மோடி

"நாடு இதுவரை வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டும் தான் பார்த்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் வெறும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கானது இல்லை. மாறாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீரட்டில் இருந்து தொடங்கி வைத்தார். மக்களவையில் அதிக இடங்களைக் கொண்ட மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் மீரட்டில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “எங்களது அரசு மூன்றாவது தடவை ஆட்சிப் பொறுப்பு ஏற்கத் தயாராகி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எங்களின் அடுத்த ஆட்சியின் முதல் 100 நாட்களில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு பார்த்தது வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டுமே. இனி நாட்டை இன்னும் வேகமாக முன்னேற்றுவோம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது வெறும் அரசை உருவாக்குவதற்கானது மட்டும் இல்லை. மாறாக அது வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது. வளர்ச்சிக்கான ஆதாரத்தை உருவாக்கி நாடு மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் போது வறுமை ஒழிக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினர் நாட்டுக்கு புதிய பலத்தை வழங்குவார்கள்.

நாட்டில் இன்று நவீன உள்கட்டமைப்பு வசதிகள் பரவலாக்கப்படுகின்றன. கட்டுமான உள்கட்டமைப்பில் இந்தியா இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் மூதலீட்டை உருவாக்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய தீர்மானங்களுடன் பெண்களுக்கான அதிகாரங்கள் முன்னேற்றமடைந்துள்ளன. இந்தியாவின் நம்பகத்தன்மை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் உற்று நோக்குகிறது.

நமது பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கியுள்ளோம். அவர்கள் சொந்த தொழில்களைச் செய்கிறார்கள். 10 கோடி பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் அங்கமாக உள்ளனர். 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக உருவாக்குவதே நம் கனவு. அதை நோக்கி நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இது மோடியின் உத்தரவாதம்.

நாங்கள் ஊழலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினோம். அவர்கள் இண்டி கூட்டணியை உருவாக்கினார்கள், தோல்வியைக் கண்டு மோடி பயந்து விட்டதாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால் இந்தியா எனது குடும்பம். எனக்கு பயம் இல்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் இப்போது கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திலும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை” இவ்வாறு பிரதமர் பேசினார்.

  • 506
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads