சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா
தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான
நாசூக்காக கூறினார் எம் எஸ் பாஸ்கர்
நமக்கெல்லாம் தெரிந்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இசைவாணியின் "ஐ அம் சாரி ஐயப்பா" பாடல் அருமை...இந்தப் பாடலை ஆடிக்கொண்ட
தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; காப்பாற்றியது நயன்தாரா - தம்பி ராமையா
அண்மையில் பேட்டி ஒன்றில் தம்பி ராமையா, தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில்,, நயன்தாரா தான் தன்னை காப்பாற்றியதாக கூறியுள்ளார். இது குறி
பிரமிக்க வைத்த  நடிகர் வேல ராமமூர்த்தி பேத்த திருமணம்
எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவரின் பேத்தி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் ஆன மாலையை
ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன் திரைப்படத்தின் வசூல்
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயக
ஒரு வாய்ப்பும் இல்லாமல், லட்சக்கணக்கில் வருமானம் வரும் 5 பிரபலங்கள்
1 )காமெடி நடிகர் செந்திலுக்கு கோடம்பாக்கத்தில் 48 போஷன் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை மூலம் வாடகை மட்டும் மாதம் லட்சக்கணக்கில் வருகிறது. 2 ) 80களில் முன்ன
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
Ads
 ·   ·  1942 news
  •  ·  0 friends
  • 1 followers

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று

ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறை அல்ல. உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தின் அடிப்படையில் பல தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இது உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கான மேன்மை மற்றும் உரிமைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு இந் நாள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதியை பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்றிலிருந்து இத் தினம் அவர்களுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.

உலகளவில் 15 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வகையில் இயலாமையை அனுபவிக்கின்றனர். இதில் 80 வீதமானவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுள் பார்வைக் குறைபாடு உடையோர், கை, கால் குறைபாடு உடையோர், செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர், மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் தொழுநோய் பாதித்தவர் மற்றும் குணமடைந்தவர் என்று ஐந்து வகையினர் உள்ளனர்.

இவ்வுலகில் மானிடராகப் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமானது. அவ் மானிடப் பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறை அல்ல. ஊனம் மற்றும் அங்கவீனம் என்பது அவரவர் மனதில்தான் உள்ளதே தவிர உடம்பில் இல்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வுலகில் எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் தம் உடலில் உள்ள அக் குறையை நிறைவாக்கி வாழ்வில் உச்சத்தை அடைந்துள்ளனர். அவ்வாறு சாதித்தவர்களில் ஒரு சில உதாரணங்கள் இதோ....

எல்பர்ட் ஐன்ஸ்டின்

இவர் உலகப் புகழ்பெற்ற கணித மேதை மற்றும் இயற்பியலாளர். மூன்று வயது வரையில் பேச முடியாமல் இருந்தார். வளர்ந்த பின்னரும் கூட இவருக்கு பேசுவது சிரமமாகத்தான் இருந்தது. குறிப்பிட்ட காலம் வரையில் தான் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியதையும் தாண்டி வாழ்ந்து சாதித்துக் காட்டியவர். இன்று வரையில் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

ஹெலன் கெல்லர்

சிறுவயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலினால் பார்க்கும் திறன், பேச்சு, கேட்கும் திறன் உள்ளிட்ட அனைத்தையும் இழந்தார். பின்னர் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு பிறருடன் தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளார்.

பேச்சு மற்றும் செவித் திறனை இழந்தவர்களுள் முதன் தலில் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்.

நாற்பது நாடுகளுக்கு பயணம் செய்து இவரைப் போன்று மாற்றுத்திறன் கொண்ட பலருக்கு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

இவர் மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகவும் கருதப்பட்டார்.

இவரின் பிறந்த தினமான ஜூன் 27 ஆம் திகதி அமெரிக்காவின் ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மர்லா ருன்யான்

அமெரிக்காவைச் சேர்ந்த இத் தடகள வீராங்களை பார்வையற்றவர். இவர், மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் மூன்று தடவைகள் உலக செம்பியன் பட்டம் பெற்றார்.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றார்.

இவ்வாறு பல பேரின் பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அதிலும் வெளியுலகத்துக்கு தெரியாமல் எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் சொந்த முயற்சி மற்றும் உழைப்பினால் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் மனிதனின் எல்லா பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடை்க்கிறது. அதாவது பார்வைக் குறைபாடுடன் இருப்பவர்களுக்கு அவர்கள் படிக்கும் விதத்திலான புதுப்புது செயல்பாடுகள் வந்துவிட்டன.

அதேபோல் அனைத்துக்குமே ஒரு மாற்று வழி கிடைத்துவிட்டது. அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால், இதை புரிந்துகொள்ள முடியாத ஒரு சிலர் இன்னமும் அவர்களை இயலாதவர்களாகவும் திக்கற்றவர்களாகவும் நோக்குகிறது.

சில வேளைகளில் சமூகத்தின் இவ்வாறான பார்வைகள் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களது திடத்தை உடைக்கலாம்.

எனவே இவ்வாறான சிந்தனை கொண்ட மனிதர்கள் ஒரு விடயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நம்மை விடவும் திறமையானவர்கள் மனதால் வலிமையானவர்கள் என்று.

எனவே இந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் விதத்தில் அவர்களுக்கு ஒன்றித்து நாமும் பயணிப்போம்.

000

  • 492
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads