
கோவை கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 12 வது பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக சாணக்கியன் எம்.பி
கடந்த வாரம் கோவை சிங்க நல்லூரில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 12 வது பட்டமளிப்பு விழாவின் போதும் அவர்களது கல்லூரி விழாவின் போதும் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது தேவைகள் உள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் கல்லூரியாக காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த பல மாணவர்களுக்கும் கடந்த இரண்டு வருடங்களிலே புலமைப்பரிசில்களை இக் கல்லூரியானது வழங்கியுள்ளது. அந்த வகையில் இக் கல்லூரி நிர்வாகத்தினரின் அழைப்பில் சிறப்பு விருந்தினராக அவ் விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பல தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு புலமைப்பரிசில்களை வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார்..
அதற்கு இணங்கி இக் கல்லூரி நிர்வாகத்தினர் இலங்கையில் காணப்படும் தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளனர். எம் மாணவர்கள் எம்மை தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான பட்டப்படிப்பிற்கான வசதிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று சாணக்கியன் எம்.பி. நம்பிக்கை கொண்டுள்'ளார்.