Category:
Created:
Updated:
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது 'ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்று கூறிய மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.
அப்போது மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை ஏற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பின்னர் யாரும் கவனிக்காவண்ணம் அவர் கண்களை துடைத்துக் கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலினும் ஸ்டாலின் பதவியேற்பின் போது கண்கலங்கினார்.