Category:
Created:
Updated:
இந்திய குடிமக்களுக்கான விசாவை ஈரான் அரசு நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிப்ரவரி 4ஆம் திகதி முதல் ரத்து செய்துள்ளது.
புதிய விதிகளின்படி சாதாரண பாஸ்போர்ட் வைத்தி ருக்கும் இந்தியர்கள் 6 மாதங் களுக்கு ஒருமுறை விசா இல்லா மல் ஈரானுக்குள் அனுமதிக்கப் படுவார்கள், இவர்கள் அதிகபட்சம் 15 நாட்கள் தங்கலாம். விமானம் மூலம் ஈரானுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும்.
இந்தியர்கள் 15 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினாலோ அல்லது 6 மாதங்களுக்குள் பலமுறை வந்து செல்ல விரும்பினாலோ அவர்களுக்கு பிற வகை அனுமதி தேவை.
அவர்கள் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகங்களில் விசா பெறுவது அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.