Category:
Created:
Updated:
நார்தன் யூஎன்ஐ (Northern Uni) நடத்தும் பிரம்மாணடமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.
அந்தவையில் தென்னிந்திய கலைஞர்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக நடிகை ரம்பா குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.