Category:
Created:
Updated:
வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன் எனவும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையுடன் மிக எளிமையான முறையில் இன்று புதன்கிழமை ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்றனர்.
இதன் பின்னர் கொள்கை பிரகடன உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.