
மட்டக்களப்பு ஹோமியோபதி வைத்தியசாலைக்கு கதிரைகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பில் 2019 முதல் ஹோமியோபதி வைத்திய நிலையம் தமிழரசுக் கட்சியின் முன்னால் மாநகர முதல்வரின் நடவடிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட கட்டிடத்தில் இயங்கிவருகின்றது. இங்கு கடமை புரியும் வைத்தியரிடம் 1000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் ஓர் கிழமைக்கு மருத்துவம் பெற வருகின்றனர். ஆனால் அங்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு தகுந்த வசதிகள் இல்லாதவிடத்து சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
அதில் முக்கிய கோரிக்கையாகிய கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் எதிர்நோக்கும் இருக்கைகளின் தட்டுப்பாடானது முதன்மைபடுத்தப்பட்டது. முன்னுமைப்படுத்தப்பட்ட
இவ் கோரிக்கையானது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இரா, சாணக்கியனின் நிதி உதவியின் மூலம் தேவையான கதிரைகள் உடனடியாக வழங்கி வைக்கப்பட்டது. இவ் ஹோமியோபதி வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சில நாட்களுக்கு முன் முன் நடந்த பிரதேச அபிவிருத்திக் குழுவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.