Category:
Created:
Updated:
இலங்கைத்தீவின் சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசகட்டமைப்புக்களின் விளைவாய் ஜனநாயகம் என்பது தடம் புரண்டு சிங்கள பௌத்த இனவாதத்தின் பிடியில் சிக்குண்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத்தீவு காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டபோது காலனித்துவவாதிகளால் பறிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் இறைமை தமிழ் மக்களுக்கே உரித்தானதாகியிருக்க வேண்டும்.
இலங்கைத்தீவின் அரசை சிங்கள பௌத்த இனவாத அரசாக வளர்த்தெடுப்பதற்கான அடிப்படைகளை சிங்களத் தலைவர்கள் பிரித்தானிய காலனித்துவவாதிகளின் சம்மதத்துடனேயே உருவாக்கிக் கொண்டார்கள் கரிநாள் பேரணிக்கு ஆதரவு வழங்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.