Category:
Created:
Updated:
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையன் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் திணேஸ் குணவர்தன வரவேற்றார்.
தாய்லாந்து பிரதமர், தாய்லாந்து துணை பிரதமர் உள்ளிட்ட 39 பேர் கொண்ட குழுவொன்றே நாட்டை வந்தடைந்துள்ளது.
தாய்லாந்து பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்தையில் ஈடுபடவுள்ளதுடன், இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.