Category:
Created:
Updated:
புதுவை மற்றும் தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாவும், எனவே மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. மற்றோரு தரப்போ இல்லைவே இல்லை விருதுநகர் அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.