ஆசிய அபிவிருத்தி வங்கி பொதுக்கூட்டத்தில் பிரதமரின் உரை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற 54 ஆவது பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.
நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இப்பதவிக்கு நியமிக்கப்படும் போது இலங்கையின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக செயற்பட்டார்.
ஜோர்ஜியாவின் டிபிலிஸில் நடைபெறவிருந்த இந்த பொதுக் கூட்டம் தற்போது நிலவும் தொற்று நிலைமை காரணமாக இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.
ஒஸ்ரியா மற்றும் மொங்கோலியாவின் ஆசியி அபிவிருத்தி வங்கி (ஏ.டீ.பீ.) ஆளுநர்கள் இக்கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை ஆளுநர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது பொதுக் கூட்டம் எதிர்வரும் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் இலங்கை பிரதமர் உரையாற்றினார்.