சினிமா செய்திகள்
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
Ads
 ·   ·  1867 news
  •  ·  0 friends
  • 1 followers

உள்ளுராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து நாடாளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதிக்குள் தாம் போட்டியிட்ட தேர்தல் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தமது பிரச்சார செலவுகளை குறித்த காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றிப் பெறாத சகல வேட்பாளர்களும் தேர்தல் பிரசார செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்

ஜனாதிபதித் தேர்தலின் போது குறித்த காலப்பகுதிக்குள் செலவு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத தரப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை சிறந்த முறையில் நடத்தி முடித்துள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கான தேவை காணப்படுகிறது.

அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்னணியில் முதற்கட்டமாக காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்தி முடித்துள்ளோம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த ஆண்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு 21 நாட்களுக்கு முன்னர் பல்வேறு காரணிகளினால் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படாமல் பிற்போடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

வேட்புமனுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவினால் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது .சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது.

ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

000

  • 70
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads