தொடரும் சீரறற காலநிலை - 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, 821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் நிவாரண நிலையங்களில் உள்ளனர். 06 வீடுகள் இடிந்தும், 265 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும் நாட்டில் சீரற்ற கால நிலையால், இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக மிக கனமழை கிடைக்கும்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தற்போது கிடைக்கும் மிக கன மழை தொடரும். திருகோணமலை , மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மன்னார் மாவட்டத்திற்கும் கனமழை தொடரும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகள், குளங்களின் கீழுள்ள பகுதிகள், ஆற்று வடிநிலங்களுக்கு அண்மித்த பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு. .
ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள். பல குளங்கள் வான் பாயத்தொடங்கியுள்ளன. கன மழையும் கிடைத்து வருகின்றது.
ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள உங்கள் படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், இந்த புயலின் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்ககூடும்.
ஆகவே எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதேவேளை வடக்கு மாகாணத்திற்கு இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள உங்கள் படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்