தொடரும் மோசமான காலநிலை - 20 மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம்
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் வெள்ள நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.டபிள்யூ.ஏ.சகுரா டில்தாரா தெரிவித்துள்ளார்
000