காலனிலையின் தற்போதைய நிலை
வங்காள விரிகுடாவில் கடந்த 23ம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக களுவாஞ்சிக்குடியிலிருந்து கிழக்காக மிகச்சரியாக 126 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது நாளை காலை புயலாக (Fengal) மாற்றம் பெறும். இது தற்போது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கன மழை 30ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
அம்பாறை மாவட்டத்திற்கு நாளை முதல் மழை படிப்படியாக குறைவடையும்.
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மிகக் கனமழை தொடரும்.
வடக்கு மாகாணத்தின் முத்தையன் கட்டு, வவுனிக்குளம் உட்பட்ட மிகப்பெரிய குளங்கள் அனைத்தும் வான் பாயத் தொடங்கியுள்ளன. இரணைமடுவின் வான் கதவுகளும் திறக்கப் பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திலும் உன்னிச்சை உட்பட்ட பெரிய குளங்கள் வான் பாயத்தொடங்கியுள்ளன.
முந்தெனியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு நாளை பிற்பகல் வரை தொடர்ச்சியாக மிகக் கன மழை கிடைக்கும்.
அன்புக்குரிய மக்களே....
புயல் எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. அதனால் கனமழையும் நீடிக்கும்.
1. மிகக் கனமழை கிடைத்துள்ளது. தொடர்ந்தும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
2. புயலின் நகரும் வேகம் மிகவும் மந்தமாக காணப்படுகின்றது.
3. அனேகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து குளங்களும் வான் பாயத் தொடங்கியுள்ளன.
4. கடல் அலைகளின் உயரம் அதிகரித்து உள்ளது. பல பிரதேசங்களில் வெள்ளநீர் கடலுக்கு செல்ல முடியாதவாறு கடல் மட்டம் உயர்வாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகரித்துள்ளன.
அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உறவுகளே...
தொடர்ச்சியாக அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அரச அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் படி செயற்பட்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வோம்.
- நாகமுத்து பிரதீபராஜா -