Ads
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ளார் . கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் தனது பெற்றோருடன் தீபிகா படுகோனே வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, தங்கை அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தீபிகா படுகோனேவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Info
Ads
Latest News
Ads