சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
Ads
 ·   ·  7593 news
  •  ·  5 friends
  • I

    9 followers

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள்: உதயநிதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில்  யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று எங்களுக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

 

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். 

 

சிலரிடம் அண்ணாவைப் போல -  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

 

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால்,  "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.

 

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

 

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

 

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். 

 

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!

  • 252
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads