சொத்து மதிப்பு உயர்வில், அம்பானி, அதானியை பின்னுக்குத் தள்ளிய சாவித்ரி ஜிண்டால்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்ட பெரும் பணக்கார்களை சாவித்ரி ஜிண்டால் பின்னுக்கு தள்ளி உள்ளதாக ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த காலண்டர் ஆண்டில் ஜிண்டாலின் சொத்து மதிப்பு 9.6 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு இதனுடன் ஒப்பிடும்போது சுமார் 5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு உயர்வு அவரை இந்தியாவின் ஐந்தாவது பணக்காரராக மாற்றியுள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது,
நாட்டின் எஃகு தொழிலில் முன்னணியில் OP ஜிண்டால் குழுமத்தின் தலைவர் தான் இந்த சாவித்ரி ஜிண்டால் சாவித்ரி ஜிண்டாலின் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் இந்த வணிகத்தைத் தொடங்கினார். JSW ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் & பவர், JSW எனர்ஜி, ஜிண்டால் ஹோல்டிங்ஸ், JSW Saw மற்றும் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் போன்ற எஃகுத் துறையின் பல்வேறு நிறுவனங்களை ஜிண்டால் குழுமம் கொண்டுள்ளது.