தமிழ்நாட்டில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளில் மிக அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கேரளாவிலும் JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1749 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக வருகிறது. தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை நேற்று 280 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்கள்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு கொரோனா பாதிப்பு விவரம்:
திருவாரூர்- 9, சென்னை- 5, திருவள்ளூர்- 2, கோவை- 1 , விழுப்புரம்- 1