சென்னையில் பெரிய அரண்மனையில் வசிக்கும் மன்னர் குடும்பத்தினர்
சென்னை, ராயப்பேட்டையில் 14 ஏக்கரில் அமீர் மஹால் என்ற ஒரு பெரிய அரண்மனை உள்ளது. ஆற்காடு நவாப் ஆட்சி செய்த பகுதியில் சென்னையில் சில பாகங்களும் அடங்கும்.
1768ம் ஆண்டு முதல் 1855ம் ஆண்டுவரை ஆற்காடு நவாப் இந்த அரண்மனையில்தான் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். ஆண்டு ஆங்கிலேயர்களின் வாரிசு இழப்புக் கொள்கையின்படி, ஆற்காடு நவாப்பின் ஆட்சியை கைப்பற்றினர்.
திருவல்லிக்கேணியில் உள்ள ஷாதி மஹால் என்ற சிறிய இடத்தில்தான் ஆற்காடு நவாப்பின் குடும்பம் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஆங்கிலேயருடன் நல்ல உடன்படிக்கையில் இருந்த ஆற்காடு நவாப்பிற்கு அந்த இடம் சரியானது இல்லை என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அமீர் மஹாலை வழங்கினர்.
1876ம் ஆண்டு அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போதுவரை அந்த அரண்மனையில்தான் வசித்து வருகின்றனர். இப்போதும் மன்னர் குடும்பத்தினரின் வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றனர்.