Category:
Created:
Updated:
மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா வெள்ளிக்கிழமை பதவியேற்றார். கவர்னர் ஹரிபாபு கம்பம்பட்டி லால்துஹோம பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மேலும் 11 ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடைபெற்றது, அங்கு மிசோ தேசிய முன்னணி தலைவரும் பதவி விலகும் முதல்வருமான ஜோரம்தங்கா கலந்து கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லாவும் உடனிருந்தார். செவ்வாயன்று, ஜோரம் மக்கள் இயக்கத்தின் சட்டமன்றக் கட்சி அதன் தலைவராக லால்துஹோமாவையும், துணைத் தலைவராக கே சப்தங்காவையும் தேர்ந்தெடுத்தனர்.