Category:
Created:
Updated:
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 213 இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்ட, மம்தா பானர்ஜி தோல்வியை சந்தித்தார். இதனால், ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், கொலை மற்றும் பாஜக பெண் பிரமுகர்களை கற்பழிப்பது உள்ளிட்ட அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சராக மம்தா பானர்ஜி 3வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஜெகதீஷ் தன்கார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டு வருவதற்கு மத்தியில் மம்தா பானர்ஜி, முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.