Ads
புதிய பேருந்துகள் வாங்க பணமில்லாத காரணத்தினால் குத்தகைக்கு எடுக்க திட்டம்
புதிய பேருந்துகளை வாங்க பணம் இல்லை என்பதால் தனியாரிடமிருந்து பேருந்துகளை குத்தகைக்கு எடுக்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் நெடுந்தூரம் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை அடுத்து தனியார் இடம் இருந்து சொகுசு பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து வெளி மாநில போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த கேரள மாநில போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
வெளி மாநில சேவைக்காக தற்போது வெறும் 300 பேருந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் அதிக பேருந்துகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் புதிய பேருந்துகள் வாங்க தற்போதைக்கு பணம் இல்லை என்பதால் அதற்கு பதிலாக தனியாரிடமிருந்து குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads