முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் - எல்.முருகன்
வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக உடல் சற்று சோர்வாக காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சில நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி தலைவர்கள் பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.