கோவிட்-19 தடுப்பூசிகள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்குமா? புதிய ஆய்வில் வெளியான தகவல்
கொரோனா முடிவுக்கு வந்த பிறகும், கோவிட் தடுப்பூசி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கோவிட் தடுப்பூசியால் தான் மாரடைப்பு அதிகமாகி வருகிறது, இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.. இந்த நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டால் கருச்சிதைவு ஆபத்து அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான புதிய ஆய்வில், கருத்தரிப்பதற்கு முன் கோவிட்-19 தடுப்பூசியைப் போடுவது ஆரம்ப அல்லது தாமதமான கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்காது என்று தெரியவந்துள்ளது.
மனித இனப்பெருக்கம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, கோவிட்-19 தடுப்பூசியைத் தொடர்ந்து, எட்டு வாரங்களுக்கு குறைவான கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை மதிப்பிடும் முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பற்றிய ஆழமான பார்வையையும் இந்த ஆய்வு முடிவுகள் வழங்குகிறது
அமெரிக்காவின் பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (BUSPH) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டது, மேலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் நடந்த இந்த 1,815 பெண்கள் பங்கேற்ற்கனர். அவர்கள் டிசம்பர் 2020 முதல் நவம்பர் 2022 வரை கண்காணிக்கப்பட்டனர்.
பெண் பங்கேற்பாளர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் கர்ப்பமான நேரத்தில் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டிருந்தனர். அந்த பெண்கள் கர்ப்பமானது முதல் கண்காணிக்கப்பட்டனர். கர்ப்பங்களில் கிட்டத்தட்ட கால் பகுதி கருச்சிதைவுக்கு வழிவகுத்தது, மேலும் இந்த கருச்சிதைவுகளில் 75 சதவீதம் கருச்சிதைவுகள் 8 வார கர்ப்பத்திற்கு முன்பே நிகழ்ந்தன, ஆனால் அதிக ஆபத்து இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான கோவிட் நோயாளிகள் ஏன் அதிக உடற்பயிற்சி மற்றும் வேலையைத் தவிர்க்க வேண்டும்? நிபுணர்கள் விளக்கம்..
ஆய்வின்படி, கருத்தரிப்பதற்கு முன் தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்ற பெண் பங்கேற்பாளர்களிடையே கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து 23.9 சதவீதமாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட டோஸ் எடுத்தவர்களில் 24.5 சதவீதமாகவும் இருந்தது. மறுபுறம், முற்றிலும் தடுப்பூசி போடப்படாதவர்களில் ஆபத்து 26.6 சதவீதமாக இருந்தது.
மேலும், கருத்தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டு முடித்தவர்களிடையே ஆபத்து 22.1 சதவீதமாகவும், கருத்தரிப்பதற்கு முன் இரண்டு டோஸ் தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களில் 20.1 சதவீதமாகவும் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.