சாலையோரக் கடையில் தோசை சுட்டார் ராகுல்காந்தி
ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தின், ஜகிடல் மாவட்டத்தில் உள்ள சாலையோர கடையில் தோசை சுட்டார். சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தெலுங்கானா மக்களுடன் பழகும் முயற்சியாக விஜயபெரி யாத்ரா மேற்கொண்டார்.யாத்திரையின் அங்கமாக தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.சுற்றுப் பயணத்தின் கடைசி நாளான நேற்று (20) ராகுல் காந்தி நுகபள்ளி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த சாலையோர கடையில் சுவையான தோசை சமைப்பதை கற்றுக் கொண்டார்.தன் கையால் அங்கிருந்தவர்களுக்கு ஒன்று, இரண்டு தோசைகளை சமைத்து கொடுத்தார். தான் சமைத்த தோசை சுவையாக இருக்கிறதா என்று அவரும், அதனை சுவைத்து பார்த்தார். தோசை சுடும் முன்பு, கடை உரிமையாளரிடம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை கவனமாக கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி, கச்சிதமாக தோசை சுடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.