Ads
தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்
தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் நேற்று அறிமுகமாகியுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி காலையிலும் உணவு அருந்தி பள்ளியில் பாடம் கற்பிக்கும் விதமாக தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கானா மாநில அரசு தமிழக அரசு செய்து வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநிலத்திலும் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவர உத்தரவிட்டார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
Info
Ads
Latest News
Ads