ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு, சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதில் அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு தொடர்பு இருப்பதாக கடந்த மார்ச் மாதம் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
இன்று காலையில் ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை முடிவில் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்பிக்கு நெருக்கமான பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் சிங்கிடம் மத்திய புலனாய்வு அமைப்பினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.