கோவையில் சுகாதாரத்துறையுடன் மல்லுக்கட்டும் பொதுமக்கள்
கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட, கொரோனா தொற்று அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. மத்திய அரசால் பரிந்துரை செய்யபட்ட தடுப்பூசி மருந்துகளை செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில், இந்த தடுப்பூசிகள் செலுத்தபட்டால், பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும் என்று, தற்காலிமாக, அரசு மருத்துவமனையில் செலுத்தப்படுகின்ற, தடுப்பூசிகளை, அரசு கலைக்கல்லூரியில், வைத்து பொதுமக்களுக்கு செலுத்தபட்டு வருகின்றது.
காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், தினமும் ஆயிரக்கணக்கானோர், தடுப்பூசிகளுக்காக இங்கு வந்து குவிகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து மருந்துகள் அத்தனை பொதுமக்களுக்கும் கிடைப்பதில்லை. அதனால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு புரிய வைத்து மீண்டும் நாளை வந்து பார்க்கும் படி அறிவுறை கூறி அனுப்பி வருகிறோம், என்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், “மருந்துகள் பற்றாக்குறை காரணமாக இது போன்ற வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றது, பொதுமக்கள் அதனை புரிந்து கொள்ளாமல் மருத்துவர்களிடமும், காவல்துறையினரிடமும் சண்டை போட முற்படுகின்றனர். ” என்றனர்.