Category:
Created:
Updated:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லே மற்றும் லடாக் பகுதிக்கு சென்றுள்ளார்.
கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் சோ ஏரிக்கு ராகுல் காந்தி பைக் ரைடு சென்றார். அதன் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்களுடன், " என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அழகமான இடங்களில் இதுவும் ஒன்று" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்டு 20ம் தேதி (நாளை) பேங்காங் ஏரியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.