நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் - சீமான்
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதில் விதிமுறைகள் இருப்பது மிகப்பெரிய கொடுமை. தேர்தல் நேரத்தில் அறிவித்த போது விதிமுறைகளை அறிவிக்கவில்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதில் காங்கிரஸ், பா.ஜனதா என 2 கட்சியும் தேர்தல் நேரத்தில் அறிவித்துள்ளது. 2 பேரும் தேர்தல் அறிக்கையில் இதனை அறிவித்துள்ளனர்.
இதை தெரிந்து தான் அரசியல் கட்சியினர் ஆதரித்தனர். தமிழ் தேசிய கொள்கையை விட்டு வந்தால் எங்களுடன் இணைந்து செயல்பட தயார் என பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா கூறியுள்ளார். அதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வியடைந்ததாக திருமாவளவன் கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் தெரியும். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி பேசுவதை விட்டுவிடலாம். ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்ய மத்திய அரசு நினைத்தால் கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்றார்.