சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

முதலிரவு அன்று மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் தவறான உறவால். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது மகளின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினர். மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல சம்பளத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது. 

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்தனர். பெண் பார்க்க வந்தபோது மணப்பெண்ணின் வயிறு பெரிதாக உள்ளதே என கேட்டனர். அப்போது சமீபத்தில் பெண்ணுக்கு கல் அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் தான் அவரது வயிறு வீங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் குறைந்து விடும் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறி சமாளித்தனர். 

கடந்த 26-ம்  தேதி டெல்லியில் வாலிபருக்கும் இளம்பண்ணுக்கும் உறவினர்கள் நண்பர்கள் சூழ தடபுடலாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் பெற்றோர்கள் ஐதராபாத் வந்துவிட்டனர். திருமணத்தன்று இரவு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் மணமகன் பல்வேறு கனவுகளுடன் காத்திருந்தார். 

தலை நிறைய பூ சிகை அலங்காரத்துடன் பட்டுப்புடவையில் மணப்பெண் கையில் பால் இனிப்புகளை ஏந்தியபடி முதலிரவு அறைக்கு வந்தார். உள்ளே வந்ததும் மனைவியை அன்போடு மாப்பிள்ளை வரவேற்றார். அப்போது கட்டிலில் அமர்ந்த மணப்பெண் திடீரென வயிறு வலியால் துடித்தார். தனக்கு வலி அதிகமாக இருப்பதாக கூறி அலறி கூச்சலிட்டார். 

பதறிப் போன மாப்பிள்ளை உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். காரில் இளம் பெண்ணை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இளம்பெண் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்றனர் . இதனைக் கேட்டதும் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு ஆத்திரமும் ஏற்பட்டது. 

இளம் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் இருந்த மணமகனின் குடும்பத்தினர் இது குறித்து உடனடியாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் செகந்திராபாத்தில் இருந்து உடனடியாக நோய்டா சென்றனர். 

மகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் .அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டோம். நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கெஞ்சினர். ஆனால் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை ஏற்க மறுத்தனர். இளம்பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர்கள் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து நொய்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் மணமகனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • 273
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads